இயக்குநர் பாலாவின் 'வணங்கான்’ டிரெய்லர் அப்டேட்!

By KU BUREAU

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தின் டிரெய்லர் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘வணங்கான்’ இந்த மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ‘இந்தியன்2’ மற்றும் ‘ராயன்’ உள்ளிட்டப் பெரிய படங்கள் ரிலீஸ் ஆவதால் ஆகஸ்ட் மாதத்திற்கு பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. படம் வெளியாக ஒரு மாதம் இருப்பதால் படத்தின் புரோமோஷனை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு ‘வணங்கான்’ படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது. படத்தின் முதல் தோற்றம், டீஸர் போன்றவற்றில் இதுவரை பார்க்காத புதிய தோற்றத்தில் நடிகர் அருண் விஜய் இருக்கிறார். நடிகர் சூர்யா படத்தில் இருந்து விலகிய நிலையில், கதாநாயகனாக பெரிய வெற்றிக்குக் காத்திருக்கும் அருண் விஜய் இந்த படத்தின் வெற்றியைப் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE