'கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம் இது தான்? வெளியான தகவல்!

By KU BUREAU

நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாபாத்திரம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

’வேட்டையன்’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது. ஒரு வார காலம் அங்கு படப்பிடிப்பை முடித்த பின்பு படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளனர். அதன் பிறகு சென்னையில் ஸ்டுடியோ ஒன்றில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் முக்கிய ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. ‘மிஸ்டர் பாரத்’ படத்திற்குப் பிறகு ’கூலி’ படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் இணைந்திருக்கிறார். இந்த செய்தியை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்திலும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கிறார். சமீபத்தில் ஸ்ருதிஹாசன் இயக்கி, நடித்திருந்த மியூசிக் ஆல்பம் ஒன்றில் லோகேஷ் கனகராஜூம் இணைந்து நடித்திருந்தார். இவர்களது ஜோடியும் ரசிக்கப்பட்டது. இந்த நட்பின் அடிப்படையிலேயே லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதியை இணைத்திருக்கிறார். ஸ்ருதி கதாபாத்திரம் மற்றும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE