கடுமையாக சாடிய மருத்துவர்: விளக்கம் அளித்த சமந்தா

By KU BUREAU

நடிகை சமந்தா, உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி குறித்து அவ்வப்போது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், 'நெபுலைசர்’ கருவியை மூக்கில் வைத்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் “பொதுவான வைரஸ் தொற்றுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், மாற்றுவழியை முயற்சித்துப் பாருங்கள்.

அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர்ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது” என்று குறிப்பிட்டிருந்தார். இதைலிவர் டாக் என்ற மருத்துவர், தனது எக்ஸ்தளப்பக்கத்தில் கடுமையாகக் கண்டித்திருந்தார்.

“நடிகை சமந்தா, சுவாச வைரஸ் தொற்றுகளைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்ஸைடைசுவாசிக்குமாறு அவரை பின்தொடர்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார். அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை அறக்கட்டளை, அப்படி செய்வது உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் என்கிறது.

ஒரு முற்போக்கான சமூகத்தில், பொது சுகாதாரத்துக்கு ஆபத்தைவிளைவிக்கும் இவருக்கு அபராதமோ அல்லது சிறை தண்டனையோ விதிக்கப்பட வேண்டும்”என்று கூறியிருந்தார். இதையடுத்து இது விவாதப்பொருளாக மாறியது.

இதற்கு நீண்ட விளக்கம் அளித்துள்ள சமந்தா, “மருத்துவர் ஒருவர் என் நோக்கங்களைக் கடினமானவார்த்தைகளால் தாக்கியுள்ளார். என்னை விட அவருக்குஅதிகம் தெரியும் என்பதில் சந்தேகமில்லை.ஆனால், 25 வருடங்களாக டிஆர்டிஓ-வில் பணிபுரிந்த தகுதி வாய்ந்த மருத்துவரால் இந்தச்சிகிச்சை எனக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

நான் பிரபலம் என்பதற்காக இல்லாமல் சிகிச்சை தேவைப்படும் நபராகவேபதிவிட்டுள்ளேன். நானே முயற்சித்தசிகிச்சையை மட்டுமே பரிந்துரைக்கிறேன். இந்த மருத்துவரையும் எனக்குமருந்துகளைப் பரிந்துரைத்த மருத்துவரையும் விவாதிக்க வைத்தால் இந்தப் பிரச்சினை தீரும் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE