`என் கனவு திரைப்படம் அதுதான்’: அடுத்த பிரம்மாண்டம் பற்றி ராஜமவுலி

By காமதேனு

தனது கனவுத் திரைப்படம் எது என்பதை இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமவுலி இயக்கிய படம், ’ஆர்ஆர்ஆர்’. டிவிவி தானய்யா தயாரித்துள்ள இந்தப் படத்தில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, வெளிநாட்டு நடிகை ஒலிவியா மாரிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆலியா பட், ராம் சரணின் காதலியாக நடித்துள்ளார். கடந்த மார்ச் 24-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.

ஆயிரத்துக்கு நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனைப் படத்தை இந்தப் படத்தை ஹாலிவுட் பிரபலங்கள் சிலரும் பாராட்டியுள்ளனர். இதையடுத்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்தப் படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை அடுத்து ராஜமவுலி அளித்துள்ள பேட்டியில், மகாபாரத கதையை இயக்குவதுதான் தனது கனவு என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ``இந்திய கதைகளை உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதை பெரிதாகவும் பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் எடுக்க வேண்டும் என்பது என் எண்ணம். ’மகாபாரதம்’ எனது நீண்ட நாள் கனவுத் திட்டம். கடல் போன்ற அந்தத் திட்டத்துக்குள் நாள் அடியெடுத்து வைப்பதற்கு அதிக காலமாகும். அதற்கு முன், மூன்று அல்லது நான்கு படங்களை இயக்கி முடிக்க விரும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE