நடிகை ஷாலினிக்கு அறுவை சிகிச்சை

By KU BUREAU

நடிகர் அஜித்குமார், மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்து இரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார் அஜித்குமார். அவர் மனைவிஷாலினிக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் அவரைப் பார்க்கவே அஜித்குமார் சென்னை திரும்பியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் தனது கையை பிடித்தபடி அஜித்குமார் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஷாலினி விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE