`அவங்க என்ன வேணாலும் நினைச்சுக்கட்டும், அமைதியா இருக்கிறதுதான் நல்லது’: புதுக்காதல் பற்றி பிரபல பாடகி!

By காமதேனு

``மக்கள் அவர்கள் விரும்பும் விதமாக நம்மை மதிப்பிடுவது இனிமையானது'' என்று பிரபல பாடகி தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் கோபி சுந்தர், தமிழில், யாருடா மகேஷ், தோழா, பெங்களூர் நாட்கள் உள்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர், தனது சமூக வலைதள பக்கத்தில், பின்னணி பாடகி அம்ருதா சுரேஷுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை கடந்த மாதம் பகிர்ந்திருந்தார். இந்தப் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே பிரியா என்பவருடன் திருமணமான கோபி சுந்தர், 2010 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின் பாடகியான அபயா ஹிரன்மயி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அம்ருதாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். கோபி சுந்தரின் பிறந்த நாளன்று அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அம்ருதா சுரேஷ், அவருக்கு காதல் ததும்ப வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.

இதனால் இருவரும் காதலில் விழுந்திருப்பது உறுதியாகி இருப்பதாக மலையாள சினிமாவில் கூறப்படுகிறது. ஆனால், இருவரும் அதுபற்றி ஏதும் சொல்லவில்லை.

இந்நிலையில், அம்ருதா சுரேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ``சில விஷயங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படும்போதோ, மதிப்பிடப்படும்போதே, நாம் ஏன் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருப்பதே நலமானது. மக்கள் அவர்கள் விரும்பும் விதமாக நம்மை மதிப்பிடுவது இனிமையானது'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE