டி.ஆருக்கான மருத்துவ ஏற்பாடுகள்: அமெரிக்கா சென்றார் நடிகர் சிம்பு!

By காமதேனு

டி.ராஜேந்தருக்கான மருத்துவ ஏற்பாடுகளைக் கவனிக்க, நடிகர் சிம்பு அமெரிக்கா சென்றுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டனர். வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவும் அவருக்கு ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று டி.ராஜேந்தரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் அவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவருக்கு அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக டி.ராஜேந்தர் அங்கு செல்ல இருக்கிறார்.

இதற்கிடையே, அவருக்கான மருத்துவ ஏற்பாடுகளை கவனிப்பதற்காக நடிகர் சிம்பு, முன்னதாக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவர் அமெரிக்கா சென்றதாகவும் இன்னும் சில நாட்களில் டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்வார் என்றும் கூறப்படுகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE