'மடத்தின் சொத்துக்களைக் கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா': மதுரை ஆதீனத்திற்கு ஷாக் கொடுத்த விஜய் ரசிகர்கள்!

By காமதேனு

"மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களைக் கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா, நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா" என மதுரை ஆதீனத்திற்கு எதிராக நடிகர் விஜய் ரசிகர்கள் மதுரை முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறன்று மதுரை பழங்காநத்தத்தில் துறவியர் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய மதுரை ஆதீனம், நடிகர் விஜய் நடித்த படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என பேசினார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுரை ஆதீனத்தை கண்டித்து மதுரை வடக்கு இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில்," எச்சரிக்கை! மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா?. வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி மதம் ஏதுமில்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை" என்று வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அரசியல் ரீதியாக சர்ச்சை கருத்துக்களை பேசி வரும் மதுரை ஆதீனத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE