‘விடாமுயற்சி’ முதல் தோற்றம் வெளியீடு

நடிகர் அஜித்குமர், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கும் படம் ‘விடாமுயற்சி’. இதில், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கி நடந்து வந்தது.

இதற்கிடையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி முதல் ஷெட்யூல் முடிவடைந்தது. அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

‘குட் பேட் அக்லி’ படத்துக்கு முன்பே தொடங்கிய ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடுமாறு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வந்தனர். இந்நிலையில் ‘விடாமுயற்சி’யின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

சாலையில் அஜித்குமார் மட்டும் ஸ்டைலாக நடந்து வரும் இந்த தோற்றம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

ஸ்பெஷல்

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

ஸ்பெஷல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

ஸ்பெஷல்

3 hours ago

மேலும்