நடிகர் ரகுமானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கவுரவம்

By காமதேனு

நடிகர் ரகுமானுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கவுரவித்துள்ளது.

ஐக்கிய அமீரக அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை கடந்த சில மாதங்களாக இந்திய நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள்.

நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், நடிகைகள் ஊர்வசி ரவுத்தலா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், காஜல் அகர்வால், பிரணிதா ஆகியோர் ஏற்கெனவே இந்த விசாவை பெற்றுள்ளனர்.

தமிழ் நடிகர்கள் பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, நாசர், நடிகைகள் மீனா, த்ரிஷா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நடிகர் ரகுமானுக்கும் இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் ரகுமான், தமிழில், சர்வாதிகாரி, ஜனகணமன, நாடகமேடை, துப்பறிவாளன் 2, பொன்னியின் செல்வன் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE