அஜித்குமார் பற்றி நான் அப்போது சொன்னது தவறு: இயக்குநர் சுசீந்திரன்

By காமதேனு

"நடிகர் அஜித்குமார் பற்றி நான் அப்போது சொன்னது தவறு என்று இப்போது தோன்றுகிறது" என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள படம், ’வீரபாண்டியபுரம்’. இதில், ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். அவர் ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். சத்ரு, சரத், ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள்தாஸ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் மூலம் நடிகர் ஜெய் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி பாடல்கள் எழுதியுள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

’வீரபாண்டியபுரம்’ பாடல் வெளியீட்டு விழாவில்

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது:

"நான் மகான் அல்ல’ படத்துக்குப் பிறகு இந்தப்படம் பழிவாங்கும் ஆக்‌ஷன் கதையைக் கொண்டது. க்ளைமாக்ஸ் சண்டை ஜெய்க்கு சூப்பராக வந்துள்ளது. தமிழை விட தெலுங்கில், இந்தப்படம் பெரிய வெற்றி பெறும்.

அது ஜெய்க்கும் தெரியும். அடுத்தடுத்து இன்னும் தரமான படங்கள் செய்வேன். அஜித் சார் அரசியலுக்கு வர வேண்டுமென நான் சொன்னது பெரிய வைரலானது. அந்தப் பிரச்சனையில் நான் டிவிட்டரில் இருந்தே போய்விட்டேன். இப்போது அது எனக்கு தவறு என தோன்றுகிறது. அரசியல் சிக்கலான, கடினமான விஷயம், அஜித் சார் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார். அதுதான் சரி. இந்தப்படம் எனக்கு திருப்பு முனையாக இருக்கும்". இவ்வாறு கூறினார்.

நடிகர் ஜெய்

நடிகர் ஜெய் பேசும்போது, "நான் இசையை கற்றுக்கொண்டுதான் இசை அமைப்பாளர் ஆகி இருக்கிறேன். அதற்கு என் குடும்பம்தான் காரணம். சுந்தர் சி சார் படத்திலும் ஒரு பாட்டுக்கு இசையமைத்துள்ளேன். பெரிய நம்பிக்கை வந்துள்ளது. இந்தப் படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஒரு நாள், வேல்ராஜ் அப்பா இறந்ததற்கு செல்வதற்காக, என்னை அன்றைக்கு என்னென்ன எடுக்க வேண்டும் என எழுதிக் கொடுத்துவிட்டு சுசி சார் போய்விட்டார், நான் தயங்கினேன். தைரியம் தந்தார். எனக்கு இயக்கவும் வரும் என நம்பிக்கை தந்த அவருக்கு நன்றி" என்றார். வசனகர்த்தா பாஸ்கர் சக்தி, பின்னணி இசை அமைத்துள்ள சபேஷ் - முரளி உட்பட பலர் பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE