இந்திய சினிமாவின் தற்போதைய ட்ரெண்டாக இருக்கும் பான் இந்தியா திரைப்பட முயற்சிகள், சிறிது சிறிதாகத் தமிழிலும் ஆரம்பிக்கப்படுகின்றன.
இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘புஷ்பா’, ஜனவரியில் வெளியாகவிருக்கும் ‘ஆர்ஆர்ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ என அடுத்தடுத்து தெலுங்கு திரையுலகிலிருந்து பேன் இந்தியா திரைப்படங்கள் வரிசையாக வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தனது தயாரிப்பான ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிட உள்ளது.
இந்நிலையில், விஷால் தனது 33-வது படம், பான் இந்தியத் திரைப்படமாக உருவாக உள்ளதாக அறிவித்துள்ளார். விஷால் நடிப்பில் ‘வீரமே வாகை சூடும்’, ‘லத்தி’ திரைப்படங்கள் தயாராகிவருகின்றன. ஏப்ரலில் ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் இயக்கி நடிக்கவுள்ளார். அதற்கு முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் விஷால்.
‘விஷால் 33’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இத்திரைப்படத்தை, மினி ஸ்டுடியோஸ் வினோத் குமார் தயாரிக்கிறார். 2022 பிப்ரவரியில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.