‘சென்னை 600028’ திரைப்படம் மூலம் கதாநாயகனான, நடிகர் ஜெய் சமீபகாலமாகச் சரியான பட வெற்றிகள் இல்லாமல் இருந்துவந்தார். தற்போது, அவர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ‘சிவ சிவ’ திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார். திரைப்படத் துறைக்கு வெளியே, கார் பந்தயங்களிலும் சாதித்துவருகிறார் நடிகர் ஜெய்.
இவர், இதற்கு முன்பே ஃபார்முலா பந்தயங்களில் கலந்து கார் ஓட்டியுள்ளார். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இவர் கார் பந்தயங்களில் கலந்துகொள்வதில் இருந்து ஓய்வெடுத்திருந்தார்.
தற்போது, எம்.ஆர்.எப் மற்றும் ஜே.ஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். 3 நாட்கள் போட்டியாக இந்தப் பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது.
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் ‘எண்ணித் துணிக’ திரைப்படக் குழு இப்போட்டிக்கு அவரை ஸ்பான்சர் செய்திருக்கிறது.