‘ஜெயில்’: ஓடிடியில் வெளியாவதில் சிக்கல்?

By காமதேனு

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயில்’. க்ரெய்க்ஸ் சினி கிரியேசன் நிறுவனத்தின் சார்பில் இத்திரைப்படத்தை ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

தங்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு தற்போது வேறொரு நிறுவனத்திடம் படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்கியதாக, மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ‘ஜெயில்’ திரைப்படத்தைத் தயாரிக்க ரூ.7 கோடி அளவுக்குச் செலவு செய்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், படத்தை திரையரங்கத்தில் ரிலீஸ் செய்வதன் மூலம் வசூலாகும் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுமெனவும், அதிலிருந்து ரூ.7 கோடியைத் தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

‘ஜெயில்’ திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் விற்பனை குறித்து, நீதிமன்றம் அல்லது மத்தியஸ்த தீர்ப்பாயத்தின் அனுமதியின்றி தயாரிப்பு நிறுவனம் எந்த முடிவையும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டு வழக்கைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE