ஸ்க்விட் கேம்: இனி தமிழும் பேசும்!

By காமதேனு

அண்மைக் காலத்தில், ஓடிடி தளங்களில் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட வலைத்தொடர் ஸ்க்விட் கேம். நெட்பிளிக்ஸில், செப்டம்பர் மத்தியில் வெளியான இந்தத் தென்கொரிய வலைத்தொடருக்கு நாடு, மொழியைத் தாண்டியும் ரசிகர்கள் உண்டு.

கொரிய மொழியில் வெளியான ஸ்க்விட் கேம் தொடரின் ஆங்கில டப்பிங்கையே, சர்வதேச ரசிகர்கள் ரசித்து வந்தனர். ரசிக பரப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், ஒளிபரப்பாகும் நாடுகளின் மொழியிலும் ஸ்க்விட் கேம் வெளியாக ஏற்பாடானது. மணி ஹெய்ஸ்ட் வலைத்தொடர், இந்தியாவின் பிராந்திய மொழிகளில் பிரபலமானதை அடுத்து, ஸ்க்விட் கேம் தொடரும் பிராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டது. முதல்கட்டமாக ஓடிடி பார்வையாளர்கள் அதிகமுள்ள தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று(டிச.6) நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. நாளது வரை சுமார் 13 கோடிக்கும் மேலான பார்வையாளர்களை சென்றடைந்துள்ள ஸ்க்விட் கேம் வலைத்தொடர், மேலும் அதிகமானோரை இனி சேரும் என்று நெட்பிளிக்ஸ் நம்புகிறது.

முன்னதாக நெட்பிளிக்ஸுடன் ஒப்பிடும்போது, அமேசான் ஓடிடி தளத்தில் மட்டுமே தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் படைப்புகள் வெளியாகி வந்தன. இந்திய மொழிகளில் இந்தி தவிர்த்து இதர மொழிகளை நெட்பிளிக்ஸ் புறக்கணித்தே வந்தது. சமூக ஊடகங்களில் ரசிகர்களின் நேரடி வற்புறுத்தலை அடுத்து மணி ஹெய்ஸ்ட், ஸ்க்விட் கேம் போன்ற பிரபல தொடர்கள் தற்போது தமிழ் பேச ஆரம்பித்திருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE