தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஷூட்டிங் சென்றது ஏன்?

By காமதேனு

சமீபத்தில் அமெரிக்கா சென்றுவந்த நடிகர் கமல்ஹாசன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். இரண்டு வார சிகிச்சைக்குப் பிறகு கடந்த 4-ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இந்த 2 வார காலத்தில், அவர் தொடர்ந்து தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. அவருக்குப் பதிலாக, ஒரு வாரம் மட்டும் அந்நிகழ்ச்சியை நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுத்துவழங்கினார்.

இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன கமல்ஹாசன், அங்கிருந்து நேராக பூந்தமல்லியில் உள்ள பிக் பாஸ் அரங்குக்குச் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். முன்பைப்போல அவரால் படப்பிடிப்பில் சுறுசுறுப்பாகக் கலந்து கொள்ள முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டதாகத் தகவல் வெளியானது. மேலும், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் ஒருவர் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கமல்ஹாசன் அப்படி எதுவும் செய்யாமல் நேராகப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் எனத் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE