‘இந்தியன்-2’-வில் தமன்னா

By காமதேனு

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்து வந்த ‘இந்தியன்-2’ திரைப்படம் கரோனா பெருந்தொற்று, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட க்ரேன் விபத்து என அடுத்தடுத்த தடங்கல்களால் தடைப்பட்டு வந்தது. இந்தநிலையில், ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பைப் பாதியில் கைவிட்டு கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கி விட, ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கக் கிளம்பிவிட்டார் ஷங்கர்.

இதையடுத்து ‘இந்தியன்-2’ திரைப்படத்தை இயக்கிய பிறகுதான் வேறு பட வேலைகளில் ஷங்கர் ஈடுபட வேண்டும் என்று லைகா நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மீண்டும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தை இயக்க ஷங்கர் ஒப்புக் கொண்டார். அதனால் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் அடுத்த ஆண்டில் ‘இந்தியன்-2’ திரைப்படத்தை ஷங்கர் தொடருவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நாயகியாக நடித்து வந்த காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால், இத்திரைப்படத்திலிருந்து விலகிக்கொண்டார். அதனால், தற்போது அவர் கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் தமன்னா நடிக்கவுள்ள முதல் திரைப்படம் ‘இந்தியன்-2’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE