தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்த அனுஷ்கா, உடல் எடை கூடியதால் திரைப்படங்களில் நடிப்பதற்குச் சிறிய இடைவெளிவிட்டார்.
எடையைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வந்தார் அனுஷ்கா. கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் இவர் நடித்த ‘சைலன்ஸ்’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் தமிழில் புதிய திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் அனுஷ்கா. ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தெய்வத்திரு மகள்’, ‘தாண்டவம்’ படங்களில் கதாநாயகியாக நடித்த அனுஷ்கா, நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் விஜய் இயக்கத்தில் கமர்ஷியல் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.