பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்: பாகம் 2

By காமதேனு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு ‘மேதகு’ என்ற தலைப்பில், கிட்டு என்பவரின் இயக்கத்தில் திரைப்படமாகக் கடந்த ஜூன் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது இத்திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இதைத் தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துவருகிறது.

இத்திரைப்படத்தில், பிரபாகரனின் இளம் வயதில் நடந்த சம்பவங்கள் அதிக அளவில் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் பாகத்தைப் போல் இத்திரைப்படமும் உலக தமிழர்களிடமிருந்து நன்கொடை பெறப்பட்டு அதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் யோகேந்திரன் இயக்கவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE