தற்போது விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் நெல்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தைப் பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் ஆகி விட்டது. இந்த 100 நாட்களும் எங்களுக்கு மகிழ்ச்சியான தினங்களாகவும், அற்புதமான மனிதர்களுடன் பழகும் தினங்களாகவும் இருந்தது ’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் விஜய் ட்ரம்ஸில் நடுநாயகமாக வீற்றிருக்க அவரைச் சுற்றி பீஸ்ட் திரைப்படக்குழு இசைக்குழு போல் போஸ் கொடுக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.