மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். சமீபத்தில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். தமிழ் மட்டுமன்றி கன்னடம், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துவருகிறார் மாளவிகா மோகனன்.
இந்நிலையில், அவர் ‘யுத்ரா’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் சித்தார்த் சதுர்வேதிக்கு ஜோடியாக நடித்துவருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட அதிரடியான திரைப்படமாக யுத்ரா உருவாகிவருகிறது. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனனுக்கும் பல சண்டைக்காட்சிகள் இருக்கிறதாம். சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் போது மாளவிகா மோகனனுக்கு கையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. “ஆக்ஷன் படங்களில் நடிக்கும் போது, அடிவிழுந்து ரத்தம் கட்டினால் கூட அது சிறு சீராய்ப்பு போல் தோன்ற ஆரம்பித்துவிடும்” தன் காயத்திற்கு ஒரு கதை சொல்லியுள்ளார் மாளவிகா மோகனன்.