சென்னை, போயஸ் கார்டன் பகுதி அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் விருப்பத்துக்குரிய வசிப்பிடமாக இருந்துவருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் இல்லங்கள் போயஸ் கார்டன் பகுதியில்தான் இருக்கின்றன. நகரத்தின் மத்தியில் இருந்தாலும் அதிகமான போக்குவரத்து நெரிசல், இரைச்சல்கள் இல்லாமல் இருப்பது இப்பகுதியின் சிறப்பு. சமீபத்தில் நடிகர் தனுஷும் இங்கே இடம்வாங்கி பிரம்மாண்டமான வீடு ஒன்றைக் கட்டிவருகிறார்.
இந்நிலையில், முன்னணி நடிகையான நயன்தாராவும் தற்போது இப்பகுதியில் உள்ள பிரம்மாண்டமான அபார்ட்மென்ட் ஒன்றில், 4 படுக்கையறை வசதிகொண்ட 2 வீடுகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நல்லநாள் பார்த்து இந்த வீட்டில் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் குடியேறவிருக்கிறாராம் நயன்தாரா.