வெளியானது ‘83’ திரைப்பட டீசர்

By காமதேனு

கபில்தேவ் தலைமையில், இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் வெற்றிபெற்றதைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘83’.

கபீர் கான் இயக்கத்தில் ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே, ஜீவா, பங்கஜ் திரிபாதி என்று பல நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். ரன்பீர் சிங் கபில்தேவாக நடிக்க, ஜீவா இத்திரைப்படத்தில் ஸ்ரீஷாந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம், கரோனா பெருந்தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

திரையரங்கில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாகக் குறைவான பார்வையாளர்களே வருவதால், மீண்டும் 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் கரோனா பெருந்தொற்றின் 2-ம் அலை காரணமாகத் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வருகிற டிசம்பர் 24-ம் தேதி இத்திரைப்படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்புடன், இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 3 முறை வெளீடு தள்ளிப்போன இத்திரைப்படம், இந்த முறையாவது சரியான தேதியில் வெளியாகுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE