கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று : மருத்துவமனையில் அனுமதி

By காமதேனு

நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார். சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் கமல்ஹாசன்.

இந்தியா திரும்பிய நிலையில், அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது ட்விட்டர் கணக்கு மூலம் தெரிவித்துள்ளார். தற்போது சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கமல் தன்னுடைய பதிவில், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

திரைத் துறையின் முக்கிய பிரமுகரான கமல்ஹாசன் கரோனா பற்றி இப்படிப் பதிவிட்டிருப்பதும், தமிழக திரைப்படத் துறையினர் கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு வேண்டும் என்று அரசைக் கேட்பதும் ஒரே சமயத்தில் நடப்பதால், 2 விஷயங்களும் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருள் ஆகியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE