சண்டைக்காட்சிக்கு தயாராகும் நிவேதா தாமஸ்!

By காமதேனு

நடிகைகள் ரெஜினா கஸாண்ட்ராவும், நிவேதா தாமஸும் தற்போது தெலுங்கில் ‘சாகினி - தாகினி’ என்ற பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய திரைப்படத்தில் நடித்துவருகின்றனர். சுதீர் வர்மா இயக்கும் இத்திரைப்படம், ‘மிட்நைட் ரன்னர்ஸ்’ என்ற கொரியன் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும்.

ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகிவரும் இத்திரைப்படத்தில், ரெஜினா - நிவேதா தாமஸ் இருவரும் நேரடியாக மோதிக்கொள்ளும் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம்பெறவுள்ளன. இந்த சண்டைக் காட்சிகளுக்காக ‘மிட்நைட் ரன்னர்ஸ்’ திரைப்படத்தின் சண்டைப் பயிற்சியாளரையே ஐதராபாத்துக்கு வரவழைத்து ரெஜினா - நிவேதா தாமஸுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மரக்கம்புகளை வைத்து சண்டைப் பயிற்சி எடுக்கும் காணொலியை நிவேதா தாமஸ் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE