பிட்லீ

By காமதேனு

‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தை அடுத்து துஷாரா விஜயனுக்குத் தொடர்ந்து கிராமிய கதாபாத்திரங்களே வந்திருக்கின்றன. "அச்சச்சோ, நான் மாடர்ன் பொண்ணுங்க" என்று 'நோ' சொல்லிவிட்டாராம் அம்மிணி. அடுத்ததாக, ஒரு மாடர்ன் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்திருக்கிறார்.

'சார்பட்டா பரம்பரை' பார்ட்-2 வந்தா என்ன சொல்லுவீங்க?

த்ரிஷா

3-வது முறையாக கமலுடன் ஜோடி சேரவிருக்கிறார் த்ரிஷா. ‘இந்தியன்-2’ திரைப்படத்திலிருந்து காஜல் அகர்வால் விலகியதைத் தொடர்ந்து, அவரது கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

குமரி வேஷம்னா கண்டிப்பா ஓகே சொல்லிடுவார்...

ராகினி திவேதி

கன்னட திரையுலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய போதைப்பொருள் வழக்கில் கைதாகி, தற்போது பிணையில் விடுதலையாகியிருக்கும் ராகினி திவேதி அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். கைதால் தடைபட்டிருந்த ‘காந்திகிரி’ , புதிதாக 'கர்மா ரிட்டர்ன்' உட்பட மேலும் சில படங்கள் கைவசம் இருக்கின்றனவாம்.

சிறைக்குப் போனா சில்லறையும் கொட்டுமோ!

பிரணிதி சோப்ரா

பாலிவுட் நடிகையும் பாடகியுமான பிரணிதி சோப்ராவுக்குக் காலணிகள் மீது அலாதிக் காதல். உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அங்கிருக்கும் நாகரிக காலணிகளை வாங்கிவிடுவார். அவரிடம் இருக்கும் நூற்றுக்கணக்கான காலணிகளை வைக்கவே வீட்டில் தனி அறை ஒதுக்கியுள்ளாராம்.

'தங்கத்தாரகை' போல மின்னுறீங்க தோழி...

அதுல்யா ரவி

தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை என்பதால், தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் அதுல்யா ரவி. மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஏஜென்ட்’ திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறாராம் அதுல்யா ரவி.

ஃபேஸ்புக்கத் திறந்தாலே உங்க முகம்தான் வருதுங்கோ...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE