வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற பிரீத்தி ஜிந்தா

By காமதேனு

மணிரத்னம் இயக்கிய ‘தில் சே’ திரைப்படத்தில் (தமிழில் ‘உயிரே’) அறிமுகமாகி, முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. பாலிவுட்டின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது, ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவராக இருக்கிறார். பிரீத்தி ஜிந்தா கடந்த 2016-ம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த ஜீன் குட்எனஃப் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கணவருடன் பிரீத்தி ஜிந்தா

தற்போது 46 வயதாகும் பிரீத்தி ஜிந்தா வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். அந்த குழந்தைகளுக்கு ஜெய் ஜிந்தா குட்எனஃப், ஜியா ஜிந்தா குட்எனஃப் என்று பெயர் வைத்துள்ளார். சமூக வலைதளத்தில் பிரீத்தி ஜிந்தா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நானும், கணவர் ஜீனும் மகிழ்ச்சியில் உள்ளோம். எங்கள் இதயங்கள் நன்றியுணர்வுடன் நிரம்பியுள்ளன. எங்கள் இரட்டை குழந்தைகளை குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இது புதிய கட்டம். உற்சாகமாக இருக்கிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் எங்கள் வாடகைத் தாய்க்கு நன்றி” எனக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகினரும் ரசிகர்களும் பிரீத்தி ஜிந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

தாய் முகமே சொல்லும் என்ன குழந்தைனு? : அவ(ள்) நம்பிக்கைகள் - 7

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE