பிக் பாஸ் வீட்டில் 47-வது நாள் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலுடன் நாள் தொடங்கியது. காலையில் கிச்சன் பகுதியில் பிரியங்காவை சமாதானப்படுத்த, ராஜு சமையல் பாத்திரங்களைக் கழுவினார். கண்ணாடி டாஸ்க்கின் 3-வது கட்டம் தொடங்கியது. இதில் அண்ணாச்சியும் ஐக்கி பெர்ரியும் மோதினர். பிங் பாங் பாலை வைத்து போட்டி கார்டன் பகுதியில் தொடங்கியது. இதில் அண்ணாச்சி வெற்றி பெற்றார். அடுத்தது, என் கேள்விக்கு என்ன பதில்? என்ற டாஸ்க்கில் இசையும் தாமரையும் போட்டிபோட்டனர். அதுதான் புரொமோவில் காட்டப்பட்ட முட்டை உடைக்கும் டாஸ்க். பிக் பாஸின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாதவர்கள், தப்பாக பதில் சொல்பவர்கள் எதிர்த் தரப்பில் இருப்பவர்கள் மீது முட்டையை உடைக்க வேண்டும்.
இதில் இசையே வெற்றி பெற்றார். தாமரை ஒரு கேள்விக்கு மட்டும் தான் சரியாக பதில் சொன்னார். வேண்டுமென்றே தப்பாக பதில் சொல்லி முட்டையை இசை மீது உடைத்தார் என்று சமூக வலைதளத்தில் பார்வையாளர்கள் கருத்திட்டுவந்தனர். அடுத்தது, அபிநவ்வும் சிபியும் மோதினர். இதில் சிபி வெற்றி பெற்றார்.
பிக் பாஸ் 5 - வைல்ட் கார்டில் நுழையப்போவது யார்?இறுதியில் லக்ஸரி டாஸ்க் முடிவில், வருண் டீம் 15 பேட்ஜ்களை வைத்து முன்னிலை வகித்தனர். இத்துடன் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்குக்கான கண்ணாடி டாஸ்க் முடிந்தது.
பின்பு, கார்டன் பகுதியில் இந்த முறை லக்ஸரி பட்ஜெட் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் டாஸ்க் வித்தியாசமாக நடைபெற்றது. தாயக் கட்டைகளை உருட்ட, அதில் வரும் நம்பர் படி பெரிய பெரிய அட்டை பெட்டிகளைத் திறக்க வேண்டும். தாமரையும் அக்ஷராவும் தாயத்தை உருட்ட, அண்ணாச்சி பெட்டிகளை ஓபன் செய்தார். அப்போது 9-ம் நம்பர் பெட்டியை திறக்கும்போது அதற்குள் இருந்து அபிஷேக் ராஜா அதிரடியாக வெளிவந்தார். அதைப்பார்த்து இமான் அண்ணாச்சி அலறியடித்துக்கொண்டு ஓடினார். அபிஷேக்கைப் பார்த்ததும் பாவனி வேகமாக ஓடிச்சென்று கட்டிப்பிடித்துக்கொண்டார். பிரியங்கா அதிர்ச்சியில் அப்படியே நின்றார். ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் அபியை கட்டிப்பிடித்தனர். தாமரை மற்றும் நீருப் அபிஷேக்கை நலம் விசாரித்தனர். அபிஷேக்கின் ரீ-என்ட்ரியில் பவானி மற்றும் பிரியங்காவே மிக மகிழ்ச்சியடைந்தனர். அபிஷேக்கை ஓட்டுபோட்டு வெளியேற்றிய பார்வையாளர்களைக் கேலிக்கு உள்ளாக்கும் வகையில், கன்டென்ட் வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் அவரை மீண்டும் அழைத்து வந்துள்ளது சமூக வலைதளத்தில் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.