சூர்யாவை எட்டி உதைத்தால் லட்ச ரூபாய் பரிசு: பாமக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

By காமதேனு

ஜெய் பீம் திரைப்படத்துக்குப் பின்பு, நடிகர் சூர்யாவுக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு 9 கேள்விகள் கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பியதைத் தொடர்ந்து, வன்னியர்களைத் தவறாகச் சித்தரித்ததற்காக, சூர்யா ரூ.5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று வன்னியர் சங்கம் தெரிவித்தது. மேலும், பல சாதி மற்றும் மத அமைப்புகள் சூர்யாவுக்கு எதிராகக் கருத்துகள் தெரிவித்தன. இந்நிலையில், ‘சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு லட்ச ரூபாய் பரிசு’ என, மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிசாமி அறிவித்தார். வன்முறையைத் தூண்டும் விதத்தில் அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், சூர்யா வீட்டுக்கு ஆயுதமேந்திய காவலர் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக சித்தமல்லி பழனிசாமி மீது 5 பிரிவுகளின்கீழ் மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE