நடிகர் பிரேம்ஜி திருமணம்

By KU BUREAU

சென்னை: இயக்குநரும் இசை அமைப்பாளருமான கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என்று இரண்டு மகன்கள். இயக்குநரான வெங்கட் பிரபுவுக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது.

சில படங்களுக்கு இசை அமைத்துள்ள பிரேம்ஜி, காமெடி வேடங்களில் நடித்தும் வருகிறார். இவருக்கும் வங்கி ஒன்றில் பணியாற்றும் இந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இவர்கள் திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் நேற்று நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE