மவுன விரதமிருக்கும் பிரகாஷ்ராஜ்?

By காமதேனு

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனப் பல மொழி திரைப்படங்களில் நடித்துவருபவர் பிரகாஷ்ராஜ். கடந்த தீபாவளி ஸ்பெஷலாக வெளியான ‘ஜெய் பீம்’, ‘அண்ணாத்த’, ‘எனிமி’ ஆகிய 3 திரைப்படங்களிலும் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ்.

இந்நிலையில், பிரகாஷ்ராஜுக்கு மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, சில காரணங்களால் ‘குரல் வளைக்கு ஓய்வு தேவை’ என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், ஒரு வாரத்துக்கு மவுன விரதம் இருக்க முடிவு செய்துள்ளாராம் பிரகாஷ்ராஜ்.

இத்தகவலை, தன்னுடைய ட்விட்டர் கணக்கில் தெரிவித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். இதைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ் விரைவில் நலமடைந்து, தனது பணியைத் தொடர வேண்டும் எனப் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE