மைக் டைசனுடன் மோதும் விஜய் தேவரகொண்டா

By காமதேனு

விஜய் தேவரகொண்டா நடிப்பில், பான் இந்தியத் திரைப்படமாக உருவாகும் ‘லைகர்’ திரைப்படத்தின் மூலம், பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில், ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே மற்றும் கெட்டப் ஶ்ரீனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தற்போது இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது. அங்கு விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் பங்குபெறும் மிக முக்கியமான சண்டைக் காட்சிகளுக்கான படப்பிடிப்பைத் தொடங்கி உள்ளனர். இதுபற்றி, ‛‛இரும்பு மனிதர் மைக் டைசனை நேருக்குநேர் சந்தித்தபோது.... இந்த மனிதர் அன்பானவர். இவருடன் இணைந்திருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் பொக்கிஷமாகப் பாதுகாப்பேன். அதிலும் இந்தத் தருணம், வாழ்நாள் பொக்கிஷமாக இருக்கும்'' என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்துக்காகக் கடுமையான குத்துச்சண்டை பயிற்சி எடுத்துத் தயாராகியுள்ளாராம் விஜய் தேவரகொண்டா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE