தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கும் இத்திரைப்படத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இத்திரைப்படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து 2 பாகங்களாக உருவாகிவருகிறது. இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தின் முதல் பாகம், வருகிற டிசம்பர் மாதமும், 2-ம் பாகம் அடுத்த ஆண்டும் வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘புஷ்பா’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் இடம்பெறவுள்ள குத்துப் பாடலில் நடனமாட, முன்னணி நடிகைகள் சிலரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவந்தது. தற்போது, நடிகை சமந்தாவை அப்பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.