ஹாலிவுட்டில் இருந்து காப்பி அடித்த போஸ்டரால் வெடித்த சர்ச்சை: சந்தானத்தின் பதில் என்ன?

By காமதேனு

நகைச்சுவை நடிகரான சந்தானம், கதாநாயகனாக நடித்துவரும் திரைப்படம் ‘சபாபதி’. அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ள இத்திரைப்படத்தில், எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, ‘குக் வித் கோமாளி’ புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நவ.19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள உள்ள இத்திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் சமீபத்தில் ஆரம்பித்தன. அதற்காக வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் போஸ்டர் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

‘சபாபதி’ யாக சந்தானம்

தமிழகத்தின் முக்கிய பிரச்சினையான, அண்டை மாநிலங்களுடனான தண்ணீர் பிரச்சினைக்கான போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக இத்திரைப்படத்தின் போஸ்டர் அமைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, “போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெறவேண்டும்” என, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அப்படிச் செய்யாவிட்டால், தண்ணீருக்காகப் போராடுகின்ற மக்களோடு சபாபதி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

‘சபாபதி’ திரைப்படத்தின் இந்தப் போஸ்டர், 2008-ல் வெளியான ‘ரோல் மாடல்ஸ்’ என்ற ஆங்கில திரைப்பட போஸ்டரின் காப்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE