பெண் குழந்தைக்கு மரக்கன்று பரிசு: அசத்தும் நடிகர்

By காமதேனு

தமிழ் சினிமாவில் எதிர் நாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துவருபவர் சௌந்தரராஜா. ‘சுந்தர பாண்டியன்’, ‘தர்மதுரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜிகர்தண்டா’, ‘தெறி’, ‘பிகில்’, ‘ஜகமே தந்திரம்’ போன்ற திரைப்படங்களில் தன் கதாபாத்திரங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர்.

நடிகர் சௌந்தரராஜா, தமன்னா என்பவரைக் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகக் கூறும் சௌந்தரராஜா, குழந்தைகள் தினத்தில் எனக்குப் பெண் குழந்தை பிறந்தது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கிறது என்றார்.

மேலும் பிறந்த கைக்குழந்தைக்குச் சௌந்தர ராஜா மரக்கன்று ஒன்றைப் பரிசாக அளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE