நயன்தாரா - சமந்தா நடிக்கும் திரைப்படத்தின் புது அப்டேட்

By காமதேனு

ரஜினிகாந்த்துடன் நயன்தாரா நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனதைத் தொடர்ந்து, அட்லீ இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கானுடன் நடித்து வருகிறார் நயன்தாரா. இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் கைதானதை அடுத்து, அத்திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.

காதல்கதையான இத்திரைப்படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக, சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி உட்படப் பலர் இத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் சென்னையில் நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் புதிய தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு நாளை வெளியிடவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE