நடிகையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா: குவியும் பாராட்டுகள்

By காமதேனு

தமிழில், 'நட்பதிகாரம்' என்ற படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. இவர் தெலுங்கு சினிமாவில், பிரபலமான குணச்சித்திர நடிகையாக இருக்கிறார். இவரது காசநோய் அறுவை சிகிச்சைக்கு, நடிகை சமந்தா உதவி செய்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தேஜஸ்வி மடிவாடா

தேஜஸ்வி இதுபற்றி கூறியதாவது: “சிறுவயதிலேயே தாயை இழந்து, தந்தை குடிபோதைக்கு ஆளானதால் அநாதையாக வளர்ந்தேன். சினிமாவுக்கு வந்த பிறகும் பல கஷ்டங்களை அனுபவித்தேன். இந்நிலையில் எனக்கு டிபி நோய் தாக்கியது. அப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் சமந்தா பெரிய மனதுடன் முன்வந்து, சொந்த செலவில் எனக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினார்”.

இதைத் தொடர்ந்து, சமந்தாவுக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்துவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE