அன்புமணி ராமதாஸின் 9 கேள்விகளுக்கு ஒரு பக்க அறிக்கையில் பதிலளித்த சூர்யா

By காமதேனு

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில், கொலைகார போலீஸ் கதாபாத்திரத்துக்குக் குருமூர்த்தி என்று பெயர் வைத்தது தொடங்கி, வன்னியர் சாதியை மோசமானவர்களாகச் சித்தரித்தது வரை ஏன் என்று 9 கேள்விகள் அடங்கிய அறிக்கையை, நடிகர் சூர்யாவுக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அவருடைய அதிகாரபூர்வ லெட்டர் பேடில் வெளிவந்த இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, இன்று நடிகர் சூர்யா அன்புமணி ராமதாஸின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

சூர்யா வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் “எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும், அதில் மறைமுகமாக யாரேனும் குறிப்பிடப்படுவதாகக் கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், பெயர் அரசியலால் மடை மாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், “நாடு முழுவதும் எல்லாத் தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE