தமிழ்த் திரைப்படங்களில் ரஜினி நடித்த ‘முத்து’ திரைப்படம் முதன்முதலாக ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜப்பானில் வெளியானது. அந்த திரைப்படத்திற்கு அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததையடுத்து ரஜினியின் மேலும் சில படங்களும் ஜப்பானில் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரஜினிக்கென்று ஜப்பானில் ஒரு ரசிகர் வட்டமும் உருவானது. இன்றைக்கும் பல ஜப்பான் ரசிகர்கள் ரஜினியை அங்கே கொண்டாடுவதைப் பார்க்க முடியும்.
இந்நிலையில், ரஜினி திரைப்படங்களைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான ‘கைதி’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 19-ந்தேதி ‘கைதி டில்லி’ என்ற பெயரில் ஜப்பான் மொழியில் வெளியாகிறது.
விரைவில் ‘கைதி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.