‘இந்தியன் - 2’ திரைப்படத்திலிருந்து விலகும் காஜல் அகர்வால்?

By காமதேனு

தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாசிக் திரைப்படங்களில் ஒன்றான ‘இந்தியன்’ திரைப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வந்தனர்.

கடந்த ஆண்டு, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் இயக்குநர் ஷங்கர் - லைக்கா தயாரிப்பு நிறுவனம் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக படத்தின் பணிகள் முடங்கின. தற்போது அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதால், மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு தயாராகி வரும் நிலையில், புதிய பிரச்சினை ஒன்று எழுந்துள்ளது.

இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதால், அவரால் மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அவருக்குப் பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்கப் படக்குழு திட்டமிடக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE