‘நவரசா’ ஆந்தாலஜியில் என் படத்தை அகற்றியது ஏன்?: பொன்ராம் விளக்கம்

By காமதேனு

கடந்த ஆகஸ்ட் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான ஆந்தாலஜி கதை ‘நவரசா’ .

ஒன்பது ரசங்களைக் குறிக்கும் வகையில் 9 இயக்குநர்கள் 9 கதைகளை இயக்கியிருந்தனர். இதில் பணியாற்றிய அனைவரும் ஊதியம் வாங்காமல் வேலை பார்த்தனர். படத்தின் மூலம் கிடைத்த தொகை கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 12,000 திரைப்பட தொழிலாளர்களுக்கு 6 மாதங்கள் தவணை முறையில் அளிக்கப்பட்டது. இந்த ஆந்தாலஜியில் நகைச்சுவை ரசத்துக்கான கதையை ஆரம்பத்தில் பொன்ராம் இயக்கினார். அந்தக் கதையில் கவுதம் கார்த்திக் பிராதன கதாபாத்திரத்தில் நடித்தார். இறுதியில் பொன்ராம் படத்தை நீக்கிவிட்டு, ப்ரியதர்ஷன் இயக்கிய ‘சம்மர் ஆஃப் 92’ திரைப்படம் இடம்பெற்றது. இது, பொன்ராம் மற்றும் அதில் பணியாற்றியவர்களுக்கு கடும் ஏமாற்றமாக அமைந்தது. பொன்ராமின் படம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியாமலிருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த பொன்ராம், தான் இயக்கிய திரைப்படத்தில் ஆடியோவில் பிரச்சினை இருந்ததால், என்னுடைய படத்தைத் தேர்வு செய்யவில்லை என்றார் மணிரத்னம். அவரது விளக்கம் எனக்கு திருப்திகரமாக இல்லை. இன்றுவரை என்னுடைய படம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. அனைவரும் அந்தப் படத்துக்காக உண்மையாக உழைத்தோம். ஆனால், கடைசியில் மனமுடைந்து போனோம் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE