ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் நடிப்பில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தான் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படத்துக்காக உடல் மொழி மற்றும் தோற்றத்தை மாற்றக் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் ஜூனியர் என்டிஆர். அதற்காக அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில், அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு, தற்போது ஓய்வில் இருந்துவருகிறார் ஜூனியர் என்டிஆர்.