பல திரைப்பிரபலங்களுக்கு, ஐக்கிய அமீரக அரசு தங்கள் நாட்டுக்குச் சுலபமாக வந்துசெல்லும் சிறப்பு விசாவான ‘கோல்டன் விசாவை’ வழங்கி வருகிறது. ஹாலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து சமீபகாலமாக மலையாள திரையுலகினர் இந்த விசாவை அதிகம் பெற்றுவந்தனர். இப்போது நடிகை த்ரிஷாவுக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. இதைப் பெற்றுக்கொண்ட த்ரிஷா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‛‛ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டான் விசாவைப் பெறும் முதல் தமிழ் நடிகை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷாவைத் தொடர்ந்து, மேலும் பல தமிழ் நடிகர்/நடிகைகளும் இந்த கோல்டன் விசாவைப் பெறவுள்ளனர் என்று கூறப்படுகிறது.