அது என் திரைப்படம் இல்லை: கௌதம் மேனன் அதிர்ச்சி

By காமதேனு

புதிதாக வெளிவரவிருக்கும் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், பாடல்கள், ட்ரெய்லர்கள் போன்றவற்றை ட்விட்டரில் பிரபலமாக இருக்கும் திரைத்துறையினர் மூலம் வெளியிடுவதைத் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு தன் ட்விட்டர் கணக்கில் வெளியிடுவதற்கு அந்தப் பிரபலங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கான தொகையை பெற்றுக்கொள்வார்கள். சிலர் நட்பின் அடிப்படையில் இலவசமாகவும் இந்த உதவியைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று, ஏ.வினோத் குமார் இயக்கத்தில், செவன்ட்டி ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் மேனன் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்புடன் ‘அன்புச்செல்வன்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. பல திரைத் துறை பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்தனர்.

இந்நிலையில், கௌதம் மேனன் தனது ட்விட்டர் கணக்கில் “இந்தப் படத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் போஸ்டரில் உள்ள இயக்குநரை நான் சந்தித்ததுகூட இல்லை. திரைப் பிரபலங்களை இந்தப் போஸ்டரை வெகுசுலபமாக ட்வீட் செய்ய வைத்துள்ளனர். பெரும் மோசடி இவ்வளவு எளிதாக நடப்பதைப் பார்க்க அச்சமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE