'விக்ரம்' படக்குழுவுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய கமல்

By காமதேனு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரின் நடிப்புக் கூட்டணியில் உருவாகி வருகிறது 'விக்ரம்' திரைப்படம். வெகு மும்மரமாக நடந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் நடித்துவருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் வரும் 7-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி நேற்று விக்ரம் படத்தின் படக்குழுவினரோடு கேக் வெட்டி தனது பிறந்தநாளை முன்னதாகவே கொண்டாடியுள்ளார் கமல்ஹாசன். இந்த நிகழ்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குநர் சாண்டி, நடிகை காயத்ரி, கிரிஷ் கங்காதரன், ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், இணை தயாரிப்பாளர் மகேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE