இது ஹிட் ஆகும்னு ஆரம்பத்துலயே எனக்கு தெரியும்!

By பகத்பாரதி

டாக்டர் பாரதியாக தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளார், 'பாரதி கண்ணம்மா' சீரியல் ஹீரோ அருண் பிரசாத். நடிப்பு துறையில் நீண்ட முயற்சியாலும், குறும்படங்களால் பெற்ற சுயமான பயற்சியாலும் மேலெழுந்து வந்து, ஆரோக்கியமான புரிதலோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அவரிடம் நடத்திய உரையாடல்...

இதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

நான் சென்னைக்கு வந்ததே 2009-ல் தான். சேலத்துல பிறந்து வளர்ந்து, ஸ்கூலிங் முடித்து, சென்னைக்கு எம்.சி.சி காலேஜ்ல விஸ்காம் சேர வந்தேன். முதல் செமஸ்டர் முடிஞ்சதும், ஃபிரெண்ட்ஸ்லாம் சேர்ந்து ஷார்ட் ஃபிலிம் பண்ண ஸ்டார்ட் பண்ணோம். அதுதான் எங்களோட கெரியருக்கான விதை. அப்போ இருந்து பாரதி கண்ணம்மா சீரியல் கமிட் ஆகிற வரைக்கும் கிட்டத்தட்ட 10 வருசமா நூற்றுக்கும் மேற்பட்ட ஷார்ட் ஃபிலிம்ஸ் பண்ணிருக்கேன். என் கூட இருந்த ஃபிரெண்ட்ஸ் எல்லோருமே இன்னைக்கு இயக்கம், ஒளிப்பதிவுனு விருப்பமான துறையில் குறிப்பிட்டு சொல்லத்தக்க இடத்துல இருக்காங்க.

'பாரதி கண்ணம்மா' சீரியல் இந்த அளவுக்கு ஹிட் ஆகும்னு எதிர்பார்த்தீங்களா?

அருண் பிரசாத்

நிச்சயமா ஹிட் ஆகும்னு நம்புனேன். டெலிவிஷன் சைடுல எனக்கு ஒரு களம் அமைச்சிக் கொடுத்தது இயக்குநர் பிரவீன் சார் தான். பாரதி கண்ணம்மா சீரியல் மூலமா என்னை மட்டுமில்லாம, 6 பேரை அறிமுகப்படுத்தினாரு. ஆறு பேருமே இன்னைக்கு நல்ல பொசிஷன்ல இருக்கோம். ’பாரதி கண்ணம்மா’ ஆரம்பிக்கும்போது, அதுல என் ரோலோட வெய்ட் பத்தி பிரவீன் சார் ரொம்ப அழகா எக்ஸ்பிளெய்ன் பண்ணாங்க. அதனால இது ஹிட் ஆகும்னு எனக்கு ஆரம்பத்துலேயே ரொம்ப நம்பிக்கை இருந்துச்சு.

பாரதி கண்ணம்மா சீரியலை மையப்படுத்தி நிறைய ட்ரோல்ஸ், மீம்ஸ் வந்துச்சே... கவனிச்சீங்களா?

எனக்கு சந்தோசமா இருந்தது. நம்ம சீரியல் ஹிட் ஆகிடிச்சுனு தோணுச்சி. ஏன்னா எந்த ஒரு விஷயமும் விவாதப்பொருளா ஆனா அது அதிகமான மக்களால கவனிக்கப் படுறதாதானே அர்த்தம்... உதாரணத்துக்கு, பீப் சாப்பிடக்கூடாதுனு சர்ச்சை வந்தப்போதான் அதைப் பற்றி நிறைய பேர் பேச ஆரம்பிச்சாங்க. சாப்பிடவும் ஆரம்பிச்சாங்க. விமர்சிக்கப்படும்போதுதான் நாம் அதிகமா வெளியில் தெரிவோம்.

அடுத்த இலக்கு?

சீரியல்ல கமிட் ஆகுறதுக்கு முன்னாடி 10 வருஷமா தொடர்ந்து சினிமால ட்ரை பண்ணிட்டு இருக்கும்போது, “எனக்கு பெரிய வாய்ப்பு அமையல, ஃபினான்சியலா எதுவும் கிடைக்கல”னு எல்லாம் எங்க அப்பாட்ட நிறைய ஷேர் பண்ணுவேன். அப்பா சொல்வாரு, “ஒரு குழந்தை பத்து மாசம் முழுசா அம்மாவோட வயித்துக்குள்ள இருந்துட்டு வந்தாதான் ஆரோக்கியமா இருக்கும். அந்த மாதிரி நீ இப்போ சினிமாக்குள்ள இருக்க. வெயிட் பண்ணு. உனக்கான டைம் வரும்னு".

நேத்தைக்கு நான் ஷார்ட் ஃபிலிம்ல வொர்க் பண்ணாம இருந்திருந்தா சீரியல்ல இருந்திருக்க முடியாது. இன்னைக்கு சீரியல்ல இந்தளவுக்கு பெர்பாம் பண்ணாம இருந்திருந்தா என்னோட நாளைய கனவை நோக்கிப் போகமுடியாது. இன்னைக்கு என்னோட 100 சதவீத உழைப்பை நான் போடுறேன். இது அடுத்த கட்டத்துக்கு என்னைக் கொண்டு போகும்னு நம்புறேன். லைஃப்ங்கிறது ஒரு ஜாலியான விஷயம்... அதுல சாதிக்கணும்னா பயப்படாம ட்ரை பண்ணணும். ஒரு மிடில்கிளாஸ் பேக் ரவுண்ட்ல இருந்து வந்த பையனா நான் உணர்ந்த விஷயம் அது. அடுத்ததா ஓடிடி-க்கு ஒரு படம் நடிக்க முடிவாகி இருக்கு. அதோட முழுவிவரம் தக்க சமயத்துல வரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE