பிட்லீ

By காமதேனு

மகன் கைதால், தான் நடித்துக் கொண்டிருக்கும் அனைத்து படத்தின் படப்பிடிப்புகளையும் நிறுத்திவிட்டார் ஷாருக்கான். இதனால், அட்லி இயக்கிக் கொண்டிருந்த ஷாருக்கானின் படத்தில் நயன்தாரா கொடுத்த கால்ஷீட்டிலும் சிக்கல். அதை சமாளிக்க ஷாருக்கானுடன் ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இனி எல்லாம் சுகமே...

ஜான்வி கபூர்

ரன்வீர்சிங் சமீபத்தில் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் பங்கேற்றார். போட்டியில் ஜான்வி தோல்வியடைந்தாலும், அப்போட்டியில் அவர் ஆடிய மேற்கத்திய நடனத்தைப் பார்த்து, தன்னுடைய அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வழங்கி இருக்கிறாராம் ரன்வீர்சிங்.

எப்படி எல்லாம் காரணம் சொல்றாங்க பாருங்க...

கஜோல்

ஷாருக்கான் மற்றும் கஜோல் நடிப்பில்1995-ல் வெளியாகி, இந்தியாவில் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த படம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயாங்கே’. இப்படத்தின் இயக்குநர் ஆதித்திய சோப்ரா, மீண்டும் அதே படத்தைச் சமகாலத்துக்கு ஏற்றவாறு ரீமேக் செய்யவுள்ளாராம். இதில் கண்டிப்பாகக் கவுரவ வேடத்திலாவது கஜோல் தோன்றுவார் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

கண்ணழகியே வருக... வருக!

நிவேதா தாமஸ்

தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ படத்தில் நடித்து முடித்த கையோடு, டான்சானியா நாட்டிலுள்ள கிளிமாஞ்சாரோ மலைச்சிகரத்தில் ஏறி, விடுமுறை நாட்களைக் கழித்துள்ளார் நிவேதா தாமஸ். விடுமுறை முடிந்து வந்ததும் நிவேதாவுக்கு தெலுங்கில் அடுத்தடுத்து ‘மீட் க்யூட்’, ‘ஷாகினி தாகினி’ என்ற 2 திரைப்படங்கள் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றனவாம்.

டூர் படத்தை எல்லாம் இன்ஸ்டால எப்ப ரிலீஸ் பண்ணுவீங்க..?

நந்திதா

2014-ம் ஆண்டு, இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்து வெற்றியடைந்த ‘முண்டாசுபட்டி’ படத்தின் 2-ம் பாகம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. இதில் மீண்டும் விஷ்ணு விஷால் - நந்திதா ஜோடியையே நடிக்க வைப்பதா, வேண்டாமா என்று விவாதம் நடக்கிறதாம்.

சிரிப்பு சரவெடியை கொளுத்திப் போடுங்க சாரே...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE