தீபாவளிக்கு தியேட்டர்களை மூடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு!

By காமதேனு

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பொது இடங்களில் மக்கள் கூடவும் அரசியல் கூட்டங்கள் நடத்தவும் தடை உள்ளது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகள் 100 சதவீத இருக்கை அனுமதியுடன் இயங்க தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகிறது. அதையொட்டியே இந்த அனுமதியைத் தமிழக அரசு அளித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கும் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நவம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில், திரையரங்குகளை மூட உத்தரவிடும்படியும் சிவமுருகன் ஆதித்தன் என்பவர் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE