பேரனுடன் ‘அண்ணாத்த’ படம் பார்த்தேன்: ரஜினி நெகிழ்ச்சி

By காமதேனு

சமீபத்தில், ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய ஹூட் ஆப்பை ரஜினிகாந்த் ஆரம்பித்துவைத்தார். குரல் மூலமாகச் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் இந்தச் சமூக வலைதளத்தில், கமென்ட்களையும் குரல் மூலமாகவே தெரியப்படுத்தலாம். இந்தச் செயலியில், ரஜினிகாந்த்தை தற்போது 43,000 பேர்களுக்கு மேல் பின்தொடர்கின்றனர். தன் பேரனுடன், ‘அண்ணாத்த’ திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்ததைப் பற்றி, தன் குரலில் இந்தச் செயலியில் பகிர்ந்துகொண்டுள்ளார் ரஜினிகாந்த். அதில், ‘படம் பார்த்து முடித்த பின்பு, தன் பேரன் “தாத்து தாத்து” என்று கூறி என்னை மூன்று, நான்கு நிமிடங்களாகக் கட்டிக்கொண்டான். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE