டிசம்பரில் ஆலியாபட்-ரன்பீர் திருமணம்

By காமதேனு

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர காதல் ஜோடிகளான ரன்பீர் கபூர், ஆலியா பட் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரன்பீர் கபூர், ஆலிய பட். இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள். இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்வி, நீண்ட நாட்களாகவே பாலிவுட்டில் இருந்துவருகிறது. வரும் டிசம்பர் மாதம் இவர்களது திருமணம் நடைபெறலாம் என பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் 'தீம் டெஸ்டினேஷன் திருமணமாக' தங்களது திருமணத்தை நடத்த உள்ளார்களாம். இருவரும் தற்போது 'பிரம்மாஸ்த்ரா' என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அதை முடித்துவிட்டு, திருமணத்துக்குப் பிறகு மற்ற படங்களை 2022-ம் ஆண்டுக்குத் தள்ளிவைத்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE